Last Updated : 23 Dec, 2019 10:42 AM

 

Published : 23 Dec 2019 10:42 AM
Last Updated : 23 Dec 2019 10:42 AM

ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: காங்., - ஜெஎம்எம் கூட்டணி முன்னிலை; பெரும்பான்மையை நோக்கி முன்னேற்றம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் 11, ஆர்ஜேடி 5 தொகுதிகளிலும், ஜெஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) 23 இடங்களிலும், ஏஜெஎஸ்யூ 2 இடங்களிலும். பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக, ஜார்க்கண்ட் அந்த மாநிலத்தில் கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

ஆளும் பாஜக, காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு இடையே போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பெரும்பான்மைக்கான 42 என்ற எண்ணிக்கையை நோக்கி காங்கிரஸ் முன்னிலை நிலவரம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஹேமந்த் சோரன் முதல்வராவார்.. தேஜஸ்வி நம்பிக்கை..

ஜார்க்கண்ட் தேர்தலில் மெகா கூட்டணி முன்னேறி வரும் நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் தேஜஸ்வி யாதவ் தேர்தலில் வெற்றி உறுதியாகிவிட்டது. ஹேமந்த் சோரன் முதல்வராவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹேமந்த் சோரன் பர்ஹாய்த் சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x