Published : 23 Dec 2019 08:21 AM
Last Updated : 23 Dec 2019 08:21 AM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- ஆட்சி அமைக்க போவது யார்?

ராய்ப்பூர்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுவர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

ஆளும் பாஜக, காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு இடையே போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை 9 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் முதல்வர் ரகுவர் தாஸ் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முன்னிறுத்தப்படுகிறார். அவர் தும்கா, பார்ஹைத் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டபேரவை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x