

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில், பொது சொத்துகளை சேதப் படுத்தியவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடங்கி யுள்ளன.
இதன் முதல்கட்டமாக, 50 பேரின் புகைப்படங்களை கோரக்பூர் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிர தேசத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சம்ப வங்களில் ஏராளமான பொது சொத் துகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அரசுக்கு கோடிக்கணக் கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது சொத்துகளை சேதப்படுத்தியவர் களிடம் இருந்தே அதற்கான இழப்பீட்டை பெற உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போராட் டங்களின்போது, சேதப்படுத் தப்பட்ட பொது சொத்துகளின் மதிப்பினை கணக்கிடும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. லக்னோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணி கள் நடைபெற்று வருகின்றன. இது, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத் தப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின்போது, பொது சொத்துகளை சேதப்படுத் தியவர்களிடம் இருந்து அதற் கான தொகை பெறப்படும். இல்லையெனில், அதற்கு ஈடாக அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கோரக்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடை பெற்ற கலவரத்தில், பொது சொத்து களை சேதப்படுத்தியவர்களில் 50 பேரின் புகைப்படங்களை காவல் துறை முதல்கட்டமாக வெளியிட் டுள்ளது. மற்ற நபர்களின் புகைப் படங்களும் அடுத்தடுத்து வெளி யிடப்படும் என காவல்துறை உயர திகாரி ஒருவர் தெரிவித்தார்.- பிடிஐ