Published : 22 Dec 2019 08:41 AM
Last Updated : 22 Dec 2019 08:41 AM

புரியாமலேயே போராட்டம் நடத்துவது தவறு; குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக படித்து விட்டு போராடுங்கள்: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுபுஹி கான் வலியுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தர்ணா நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

புதுடெல்லி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாகப் படித்துவிட்டு புரிந்துகொண்டு போராடுங்கள் என்று உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சுபுஹி கான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 15 மாநிலங்களில் போராட் டங்களை சில அமைப்புகள் நடத்தி வருகின்றன. ஆனால் உண்மை யான நிலை வேறாக உள்ளது. இந்தச் சட்டத்தை முழுமையாகப் படிக்காமலும், புரிந்துகொள்ளா மலும் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவறு.

இந்தச் சட்டத்தில் உள்ள ஷரத்து களை படித்துப் புரிந்து கொண் டால் இந்த போராட்டமே நடக் காது. இந்த சட்டமானது, ஆப் கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் மதரீதி யான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி தப்பி வரும் சிறுபான்மை யினர் நலனுக்காக உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக இங்கு சிலர் போராடி வருகின்றனர்.

நாட்டில் படிக்காதவர்களின் கூட்டத்தைத்தான் நாம் உரு வாக்கி வைத்திருக்கிறோம். புரியா மலேயே போராட்டம் நடத்தும் மாணவர்களை என்னவென்று சொல்வது? தற்போது 2 விஷயங்கள் குறித்து நாட்டில் சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது.

பிறப்பால், பெற்றோர் வழியாக, உரிய ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்வதன் மூலம், இயற்கையாகவே, இந்தியாவின் எல்லைக்குள் இணைப்பதன் மூலம் என 5 வழிகளில் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும்.

இரண்டாவதாக எழுந்துள்ள பிரச்சினை குடியுரிமைத் திருத்தச் சட்டமாகும். இந்தியாவில் ஒருவர் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வந்தால், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், விண்ணப்பித்து இந்தியக் குடியுரிமையைப் பெற இயலும். இதில் மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியா வரும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதோர் இந்தியாவில் 5 ஆண்டுகள் தங்கி இருந்தாலே போதும் என சலுகை வழங்கப்படுகிறது. இந்த உண்மையை, போராடும் மக்கள் புரிந்து கொண்டாலே பிரச்சினை தீர்ந்துவிடும்.

இந்தச் சட்டமானது முஸ்லிம் களையோ அல்லது வேறு பிரிவி னரையோ குறிவைத்து இயற்றப் பட்டது அல்ல. போராட்டம் நடத்து வோர் முதலில் அந்தச் சட்டத்தை முழுமையாகப் படித்து விட்டு புரிந்துகொண்டு பின்னர் போராடுங் கள் என்று நான் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x