

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5.5 லட்சம் உதவி அளிப்பதாக டெல்லி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், டெல்லி வக்பு வாரிய சேர்மனுமான அமானத்துல்லா கான் தன் முகநூல் பக்கத்தில் உ.பி, கர்நாடகாவின் மங்களூரு ஆகிய இடங்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போராட்டத்தினால் பாதிக்கப்பட்டு இடது கண்ணில் பார்வை இழந்த ஜமாலிய மிலிய இஸ்லாமியா மாணவர் முகமது மின்ஹாஜுதீன் என்பவருக்கு கான் ரூ.5 லட்சம் உதவியும் வக்பு வாரியத்தில் நிரந்த வேலையும் கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச போராட்டத்தில் இதுவரை 11 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.