

குடியுரிமை (திருத்த) சட்டம் நிறைவேற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில் பெட்ரோல் தீவைப்பு சம்பவங்களைத் தவிர்க்கும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. கடந்த ஒருவாரமாக மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் வன்முறை நடந்த நிலையில், உயிரிழப்பு சம்பவங்களும் தீவைப்பு சம்பவங்களும் ஏற்பட்டன.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் மோஸ் கிஷன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டில் கூறியுள்ளதாவது:
''போராட்டத்தில் ஈடுபடுபடுவதற்கு முன்பே மாணவர்கள் சிஏஏவை படிக்க வேண்டும். நாடு தழுவிய என்.ஆர்.சி. இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே யாரும் அஞ்சக்கூடாது. இது எந்தவொரு பிராந்தியத்திற்கும் அல்லது எந்த மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் எதிரானது அல்ல. யாரும் சிறைக்கு அனுப்பப்படுவதில்லை. அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். திரையுலகக் கலைஞர்களும் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள், அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்?
அரசியல் கட்சிகளும் புத்தி ஜீவிகளும் தீ வைப்பில் ஈடுபடவேண்டாம். தீயில் பெட்ரோலை ஊற்றக்கூடாது, அதற்கு பதிலாக அவர்கள் தீப்பிழம்புகளை அணைக்க வேண்டும். லக்னோவின் சில கிராமப்புறங்களில் மட்டுமே வன்முறை பதிவாகியுள்ளது. டெல்லியில், ஆர்ப்பாட்டங்கள் அமைதியானவை. வடகிழக்கும் இயல்பாக உள்ளது.
அரசியல் கட்சிகளும் புத்திஜீவிகளும் மதத்தின் அடிப்படையில் மக்களைத் தூண்டக்கூடாது. சிஏஏ தங்களுக்கு எதிரானதல்ல என்பது மாணவர்களுக்குத் தெரியாது. அசாமின் என்.ஆர்.சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் சிஏஏ-விலிருந்து பயனடைவார்களா என்பது குறித்து இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் மோஸ் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
சிஏஏமற்றும் என்ஆர்சி பற்றி உருவாக்கப்படும் கட்டுக்கதைகளை அகற்றுவதற்காகவே இந்தி செய்தித்தாள்களில் அரசாங்கம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.
அதில் "என்ஆர்சி இன்னும் அறிவிக்கப்படவில்லை, எதிர்காலத்தில் அவ்வாறு செய்யப்பட்டால், எந்தவொரு இந்திய குடிமகனும் கவலைப்படாத வகையில் விதிகள் மற்றும் விதிமுறைகள் இருக்கும்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் குறிப்பு
என்ஆர்சியைப் பற்றி அனைவரும் தெளிவுபடுத்திக்கொள்ளும்விதமாக அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்ட சில குறிப்புகளும் தற்போது என்ஆர்சியின் உண்மைச் சரிபார்ப்பு என்ற தலைப்பில் வாட்ஸ்அப்பில் வலம் வருகின்றன.
அதில், ''இந்த செயல்முறை குடிமக்களின் பதிவேட்டில் உங்கள் பெயரைப் பதிவு செய்வதற்கான ஒரு சாதாரண நடைமுறைதான். இது ஒரு சாதாரண அடையாள அட்டை போன்றதுதான். அல்லது வாக்காளர் பட்டியலில் நமது பெயர் பதிவிடுவது அல்லது ஆதார் அட்டை பெறுவது போன்றதுதான். அதேபோன்ற அளவில்தான் என்ஆர்சிக்கு ஆவணங்கள் வழங்கப்படட வேண்டும் என்ற நிலையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேதி மற்றும் பிறந்த இடம் தொடர்பான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிப்பதன் மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியும். இருப்பினும், இதுபோன்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதில் வாக்காளர் அட்டைகள், பாஸ்போர்ட், ஆதார், உரிமங்கள், காப்பீடு ஆகியவை அடங்கும்
ஆவணங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், பள்ளியிலிருந்து வெளியேறிய டிசி சான்றிதழ்கள், நிலம் அல்லது வீடு தொடர்பான ஆவணங்கள் அல்லது அரசு அதிகாரி வழங்கிய பிற ஒத்த ஆவணங்கள் இருந்தால் போதுமானது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வாட்ஸ் அப் குறிப்பில், ''2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ஆவணமற்ற முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை அனுமதிக்கும் சிஏஏ சட்டம் டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
நாடு தழுவிய என்ஆர்சி பின்பற்றும் இந்த சட்டம், சரியான ஆவணங்கள் இல்லாததால் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து விலக்கப்பட்ட முஸ்லிமல்லாதவர்களுக்கு பயனளிக்கும் என்ற அச்சமும், அதேபோன்ற சூழ்நிலைகளில் விலக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருக்கும் என்ற தேவையற்ற சந்தேகமும் எழுகின்றன. என்று தெரிவிக்கும் இந்தக் குறிப்பில், ''வீடற்றவர்கள், ஏழைகள், படிக்காதவர்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு என்ன நடக்கும்'' என்ற கேள்வியை
உட்படுத்தி பதில் வழங்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் குறிப்பில் ''இது முற்றிலும் சரியானதல்ல. அத்தகையவர்கள் சில அடிப்படையில் வாக்களிக்கின்றனர், மேலும் அவர்கள் அரசாங்கத்தின் நலத்திட்டங்களின் பலனையும் பெறுகிறார்கள். அதன் அடிப்படையில் அவர்களின் அடையாளம் நிறுவப்படும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.