இந்திய சீன எல்லையில் 4 ரயில் வழித்தடங்கள்: மத்திய அரசு யோசனை

இந்திய சீன எல்லையில் 4 ரயில் வழித்தடங்கள்: மத்திய அரசு யோசனை
Updated on
1 min read

இந்திய சீன எல்லையில் 1,352 கிமீ தொலைவுக்கு 4 ரயில் வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசு யோசித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மாநிலங்களவையில் நேற்று மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

மிஸ்ஸமாரி - டெங்கா - டவாங் (378 கிமீ), பிலாஸ்பூர் - மணாலி - லே (498 கிமீ), பசிகாட் - டெசு - ரூபாய் (227 கிமீ) மற்றும் வடக்கு லகிம்பூர் - பாமே - சிலபதார் (249 கிமீ) ஆகிய நான்கு ரயில் வழித்தடங்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அடை யாளம் கண்டுள்ளது.

இந்த வழித்தடங்கள் ஆய்வுக்கு அனுமதிக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் ரயில்வே அமைச்சகம் கோரிக்கை வைத் துள்ளது. இவற்றை கட்டமைப்பதற்கு சுமார் ரூ.345 கோடி செலவாகலாம்.

ஆனால் இதுவரை எந்த வழித்தடத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எல்லா வழித்தடங்களும் கடுமையான மலைச்சிகரங்களுக் கிடையே பயணிப்பதால், கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து இப்போதைக்குக் கூற முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in