குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தி உரையாற்றிய மன்மோகன் சிங் வீடியோவை வெளியிட்டது பாஜக

குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தி உரையாற்றிய மன்மோகன் சிங் வீடியோவை வெளியிட்டது பாஜக
Updated on
1 min read

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2003-ல் மன்மோகன் சிங் இதே சட்டத்தை வலியுறுத்தி மாநிலங்களவையில் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், இதே சட்டத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் 2003-ம் ஆண்டு மாநிலங்களவையில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங் பேசிய வீடியோவை பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ‘‘பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாகதுன்புறுத்தலுக்கு ஆளாகி அகதிகளாக இந்தியா வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு பரந்த கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும். துணைப் பிரதமர் ( அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி) இதை மனதில் கொண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவார் என்று நம்புகிறேன்’’ என்று மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

இந்தக் காட்சிகள் கொண்டவீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. 2003-ம் ஆண்டு குடியுரிமைசட்டத்தில் திருத்தம் செய்ய ஆதரவாக பேசிவிட்டு இப்போது, காங்கிரஸ் கட்சி அரசியல் உள்நோக்கத்தோடு போராடுவதாகபாஜக குற்றம் சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in