தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்: டெல்லியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் களுக்கு இரட்டை குடி யுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரத மர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரி வித்தார். டெல்லியில் அமித் ஷா உள் ளிட்ட மத்திய அமைச்சர்களையும் அவர் சந்தித்தார்.
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண் டாட்டத்துக்கான 2-வது தேசியக் குழு கூட்டம் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யில் நேற்று மாலை நடந்தது. இதில் பிர தமர் நரேந்திர மோடி, மத்திய அமைச் சர்கள், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். விழாவின்போது, பிரத மர் மோடி மற்றும் அமைச்சர்களை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
அமித் ஷாவுடன் சந்திப்பு
பின்னர், மத்திய உள்துறை அமைச் சர் அமித்ஷா, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரையும் நேற்று இரவு சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர் களின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.
குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
இது ஜனநாயக நாடு. தங்களது கருத்துகளை சொல்ல இங்கு எல் லோருக்கும் உரிமை உண்டு. குடி யுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் ஒருசில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் தானாக கலைந்து சென்ற தால், எவ்வித பிரச்சினையும் இல்லை.
பல மாநிலங்களில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே?
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும். ஜனநாயக ரீதியாக, அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தினால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மேலும் 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்துள்ளதே?
உள்ளாட்சித் தேர்தல் குறித்து முடிவெடுத்தது மாநில தேர்தல் ஆணையமே தவிர, அரசு அல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப் படையில் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, திரும்பப் பெறும் பணிகளும் முடிந்து விட்டன. தேர்தல் நிச்சயம் நடக்கும். வழக்கு என்பது தேர்தல் ஆணையம் - நீதிமன்றம் இடையிலான பிரச்சினை.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள போராட் டத்தால், உள்ளாட்சித் தேர்தல் பணி பாதிக்கப்படுமா?
இந்தியாவில் வாழும் இந்தியர் களுக்கு இந்த திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இப்போராட்டத்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு எந்த பாதிப்பும் வராது.
அதிமுக வாக்களித்ததுதான் சட்டத் திருத்தம் வர முக்கிய காரணம் என்று கூறப்படுகிறதே?
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே ஏதாவது குற்றச்சாட்டு கூறி போராட்டத்தை தூண்டிவிடுகின்ற னர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இங்கு வாழும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லாதபோதும், போராட் டம் நடத்தியே ஆகவேண்டும் என் பவர்களை எப்படி தடுக்க முடியும்.
குடியுரிமை பிரிவில் இலங்கை தமிழர்களையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதா?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016 சட்டப் பேரவை பொதுத் தேர்தல் முடிந்து பிரதமரை சந்தித்தபோது, இலங்கை யில் இருந்து தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே கோரிக்கையை நானும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். தற்போதும் வலியுறுத்தினேன். இங்கு உள்ள இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகின்றன. இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த மாதாந் திர உதவித் தொகை ரூ.400-ஐ முன் னாள் முதல்வர் ரூ.600 கூடுதலாக சேர்த்து ரூ.1,000 ஆக வழங்கினார். அது தற்போதும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி மற்றும் தமிழக மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப் படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
முன்னதாக நேற்று காலை டெல்லி சென்ற முதல்வரை அங்கு அமைச்சர் கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட் டோர் வரவேற்றனர்.
