

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் போராட்டம் நடத்தினர், அவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை குறித்து ஷாரூக் கான் ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று ரேடியோ ஜோக்கியும் நடிகருமான ரோஷன் அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ரோஷன் அப்பாஸ் தன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது:
“ஏதாவது கூறுங்கள் ஷாரூக், நீங்களும் ஜாமியா மாணவர்தானே. உங்களை இந்த மவுனத்தில் ஆழ்த்தியது யார்? ஜாமியா மிலியா மாணவர்கள் பக்கம் நிற்போம்” என்று பதிவிட்டிருந்தார்.
பாலிவுட் நட்சத்திரங்களான ராஜ்குமார் ராவ், தாப்ஸி, அலங்கிருதா ஸ்ரீவஸ்தவா, ரிச்சா சத்தா, அனுபவ் சின்ஹா,அனுராக் காஷ்யப், பரினீதி சோப்ரா, ஆகியோர் உட்பட குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, இதன் மீதான எதிர்ப்பு, வன்முறை ஆகியவை பற்றி ட்வீட் செய்து வருகின்றனர்.
ஆனால் பாலிவுட் சூப்பர்ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாரூக் கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் இது குறித்து மவுனம் சாதித்து வருகின்றனர். நடிகர் அக்ஷய் குமார் இது தொடர்பாக ஒரு ட்வீட்டுக்கு லைக் போட்டு விட்டு தவறாக லைக் போட்டு விட்டேன் என்று கூறி நெட்டிசன்களிடம் வகையாகச் சிக்கினார்.