Last Updated : 16 Dec, 2019 06:33 PM

 

Published : 16 Dec 2019 06:33 PM
Last Updated : 16 Dec 2019 06:33 PM

அலிகர் முஸ்லிம் பல்கலையில் போராட்டம்: இந்துத்துவா மாணவர் அமைப்பினர் கண்டன ஊர்வலம்

புதுடெல்லி

உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் போராட்டத்தை எதிர்த்து அந்நகர இந்துத்துவா மாணவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர். இங்கு தீவிரவாத நடவடிக்கைகள் பரவுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

கல்வி நகரமான அலிகரில் அதன் மத்திய பல்கலைகழகத்திற்கு வெளியேயும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் அமைந்துள்ளன. இதில் பயிலும் மாணவர்களில் சிலர் அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தில் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து நடைபெறும் போராட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

இதற்காக சுமார் நூறு பேர் நேற்று மாலையில் கண்டன ஊர்வலம் நடத்தினர். இதில், பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய விஷ்யார்த்தி இந்து பரிஷத் (ஏபிவிபி), அகண்ட இந்து பாரத் இந்து சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய அகண்ட பாரத் இந்து சேனாவின் தேசிய தலைவர் ஹீபக் சர்மா கூறும்போது, ‘அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் தமது போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவமதிக்கும் வகையிலும் பேசுவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு அதன் திட்டங்களை எதிர்ப்பது இவர்கள் வேலையாக உள்ளது.’ எனத் தெரிவித்தார்.

இதில் அவர்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் தீவிரவாதம் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினர். நகரின் மையப்பகுதியில் இருந்து அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வாயில் வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இதனால், இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க உபி போலீஸாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x