

முதல்வர் பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்கிறார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் அனைத்து மாநில முதல்வர்களும் இடம்பெற்றுள்ளனர். மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி வரும் 19-ம் தேதி சென்னை யில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல் கிறார். 19-ம் தேதி வியாழக்கிழமை டெல்லி யில் இருக்கும் அவர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நீர்வளத் துறை அமைச்சர் கஜேந் திரசிங் ஷெகாவாத் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா அணை கட்டும் விவகாரம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்த இருப்பதாகக் தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.
சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாகவும் விமானப் பணிகளை விரைவாக முடிக்க வும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு கோரிய வறட்சி, மழை, வெள்ள நிவா ரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வழங்க வேண் டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்த இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.