

பிஹார் புதிய ஆளுநராக ராம் நாத் கோவிந்தும் இமாச்சலப் பிரதேச ஆளுநராக ஆச்சார்ய தேவ் விராத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிஹார் ஆளுநராக இருந்த தேவ்தர்ஷன் ஜெய்ஸ்வா லின் பதவிக்காலம் 2014 நவம்பர் 26-ல் நிறைவடைந்தது. அந்த மாநிலத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, பிஹாரை கவனித்து வந்தார்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில் பிஹாரின் புதிய ஆளுநராக ராம் நாத் கோவிந்த் நியமிக்கப் பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கோவிந்த் (69) இரண்டு முறை மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றியுள்ளார். வழக்கறிஞரான அவர் தற்போது பாஜக எஸ்.சி. பிரிவுத் தலைவராக உள்ளார்.
இமாச்சலப் பிரதேச ஆளுநர்
இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த ஊர்மிளா சிங்கின் பதவிக் காலம் கடந்த ஜனவரி 24-ல் நிறைவடைந்தது. அந்த மாநிலத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படாததால் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் இமாச்சலப் பிரதேச ஆளுநராக ஆச்சார்ய தேவ் விராத் (56) நியமிக்கப்பட்டி ருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று அறிவித்தது.
ஹரியாணாவின் குருஷேத் ராவில் செயல்படும் குருகுலம் பள்ளியின் முதல்வராக விராத் பணியாற்றி வருகிறார்.
நிதிஷ்குமார் அதிருப்தி
பிஹார் புதிய ஆளுநர் நியமனம் குறித்து அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய போது, ஆளுநர் நியமனத்தில் மரபுகள் கடைப்பிடிக்கப் படவில்லை. என்னை ஆலோசிக் காமல் ஆளுநர் நியமிக்கப் பட்டுள்ளார். ஆளுநர் நியமனத்தை ஊடகங்களின் வாயிலாகவே அறிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.