

கங்கை நதியை தூய்மைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.
கங்கை நதியை தூய்மைப் படுத்த உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து ‘நமாமி கங்கா’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடர்பான தேசிய கங்கை கவுன்சிலின் முதல் கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடைபெற்றது.
சந்திரசேகர் ஆசாத் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கஜேந்திர சிங் ஷெகாவத், ஹர்ஷவரதன், மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது நமாமி கங்கை திட்டத்தின் கீழ் இதுவரை நடந் துள்ள பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் ஆலோசனை வழங் கினார். பிறகு திட்டப் பணிகள் தொடர்பான கண்காட்சியை பிர தமர் பார்வையிட்டார். இதை யடுத்து கான்பூரில் கங்கை நதியின் அடல் படித்துறைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கிருந்து கங்கையில் மோட்டார் படகில் பயணம் செய்து திட்டப்பணிகளை பிரதமர் பார்வையிட்டார்.
தவறி விழுந்தார்
முன்னதாக, அடல் படித் துறைக்கு வந்த பிரதமர் மோடி படிக்கட்டுகளில் ஏறும்போது தடுமாறி விழுந்தார். அப்போது அருகில் இருந்து பாதுகாவலர்கள் ஓடிச் சென்று பிரதமர் எழுவதற்கு உதவி புரிந்தனர்.