Published : 15 Dec 2019 07:30 AM
Last Updated : 15 Dec 2019 07:30 AM

வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் எரிப்பு; அசாமில் இன்டர்நெட் சேவை ரத்து; அரசு ஊழியர்கள் 18-ம் தேதி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நேற்று ஏராளமான அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

கொல்கத்தா/குவாஹாட்டி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அசாமில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் வரும் 18-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா, சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல் பிர தேசத்தில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக் கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்க ளது பெரும்பான்மைக்கும், பாரம் பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மம்தா எச்சரிக்கை

அசாம், மேற்கு வங்கம் உள் ளிட்ட 9 மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் உள்பட பல அமைப்பினர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இதனிடையே நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறைப்படி மட்டுமே மக்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால் சட்டத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்த யாருக் கும் உரிமையில்லை. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளை விப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பஸ்களுக்கு தீவைப்பு

மேற்கு வங்க மாநிலம் தோம்ஜுர் மாவட்டம் சலாப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது சிலர் சாலையில் டயர்களை போட்டு எரித்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில பஸ்களை அவர்கள் தீவைத்து எரித்தனர். மொத்தம் 15 பஸ்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மூர்ஷிதாபாத் மாவட்டத்திலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் மர்ம நபர்கள் சிலர் மூர்ஷிதாபாதிலுள்ள பெல்தாங்கா ரயில் நிலையத்தை சூறையாடினர். ரயில் நிலையத்தில் இருந்த பொருட்களுக்கும் தீவைத்தனர். மூர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா மாவட்டங்களில் அதிக அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடை பெற்றன.

ஹவுரா மாவட்டத்திலுள்ள கோனா விரைவுச் சாலையை சிலர் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலை 6-ஐ இணைக்கும் சாலையாகும். ஹவுரா புறநகர்ப் பகுதியில் சுமார் 20 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். ஹவுரா மாவட்டத்திலுள்ள சாங்க்ரயில் ரயில் நிலையத்துக்கும் ஆர்ப் பாட்டக்காரர்கள் தீவைத்தனர். ரயில் மறியல் கிழக்கு ரயில்வே மண்டலத்திலுள்ள சீல்டா-ஹஸ்னா தடம் வழியாகச் சென்ற ரயில் களை சிலர் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஹவுரா-காரக்பூர் தடத்திலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட 20 ரயில்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. ஹவுரா-திகா, ஹவுரா-திருப்பதி, ஹவுரா-சிஎஸ்எம்டி கீதாஞ்சலி, ஹவுரா எர்ணாகுளம், ஹவுரா - திகா -ஹவுரா-கண்டாரி, கோரமண்டல், ஹவுரா-யஷ்வந்த்பூர், ஹவுரா - ஹைதராபாத் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய் யப்பட்டுள்ளன. இதேபோல் புரி-திகா, புரி-சான்ட்ராகாச்சி ரயில் களும் வரும் 15-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. காலி ரயில் களுக்கு தீவைப்பு இதேபோல் மூர்ஷிதாபாத் மாவட்டம் லால் கோலா ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டிருந்த 5 காலி ரயில்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர்.

காமாக்யா ரயில் நிலையத்தில் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த வழியாக வந்த ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர் போராட்டம்

இதற்கிடையே, அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத் தின் குவாஹாட்டியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டனர். இன்டர்நெட் சேவை ரத்து அசாம் முழுவதும் வரும் 16-ம் தேதி வரை இன்டர்நெட் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று மாநில கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் கிருஷ்ணா தெரிவித்தார். அசாமில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட் டோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அசாமில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நகரங்கள், பதற்றமான பகுதி களில் ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள் ளனர். இருப்பினும் திப்ருகர், ஜோர்ஹட் உள்ளிட்ட மாவட்டங் களில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 18-ம் தேதி வேலை புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக அசாம் மாநில அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சோனித்பூர் மாவட்டம் தேகியாஜுலி பகுதி வழியாக வந்த காலி எண்ணெய் டேங்கர் லாரிக்கு வன்முறைக் கும்பல் தீவைத்தது. மேலும் அந்த லாரியை ஓட்டிய டிரைவரையும், அந்த கும்பல் அடித்துக் கொலை செய்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஷில்லாங்கில் ஊரடங்கு தளர்வு

மேகாலயா மாநிலம் ஷில்லாங் கில் ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை தளர்த்தப்பட்டது. நாகாலாந்து முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் நாகா மாணவர்கள் சம்மேளனத்தை (என்எஸ்எப்) சேர்ந்த மாணவர்கள் 6 மணி நேர முழு அடைப்புக்கு நேற்று அழைப்பு விடுத்தனர். இதனால் சாலைகள் வெறிச்சோடின. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஐஓஎல் கோரிக்கை

எண்ணெய் லாரி டேங்கர்களை இயக்குவதற்கு அசாம் மாநில மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆயில் இந்தியா நிறுவனம் (ஐஓஎல்) கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது லாரிகளைத் தடுக்க வேண்டாம் என்றும் அது கோரியுள்ளது.

அசோம் ஜதியாதபதி யுவ சாத்ரா பரிஷத் (ஏஜேஒய்சிபி), ஏஏஎஸ்யு உள்ளிட்ட 30 அமைப்பினர் போராட் டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வன்முறை, போராட் டங்கள் காரணமாக பல்வேறு இடங்களில் தவிக்கும் பொதுமக் களை அழைத்து வருவதற்காக குவாஹாட்டியிலிருந்து சிறப்பு ரயில் களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலை.க்கு விடுமுறை

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதால் டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்துக்கு வரும் ஜனவரி 5-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மும்பையில் மிகப்பெரிய அளவில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மும்பையில் வசிக்கும் அசாம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆசாத் மைதானத் தில் நடைபெற்ற இந்த போராட் டத்தில் நடிகை தீபன்நிதா சர்மா கலந்துகொண்டார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x