

டிச.12ம் தேதி நாட்டின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார், அதாவது இதன் மூலம் மசோதா சட்டமாக மாறும்.
அதிகாரபூர்வ அறிவிக்கையின் படி அரசு கெசட்டில் டிசம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டதையடுத்து இந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது.
இந்தச் சட்டத்தின் படி டிச.31, 2014 வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், பவுத்தர்கள், கிறித்துவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள், அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 9ம் தேதியன்று லோக்சபாவிலும் டிசம்பர் 11ம் தேதியன்று ராஜ்யசபாவிலும் கடும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே நிறைவேறியது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.