Published : 13 Dec 2019 08:16 AM
Last Updated : 13 Dec 2019 08:16 AM

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக கலவரம்; அசாமில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் மரணம்: குவாஹாட்டியில் ஊரடங்கு அமல்- ராணுவம் குவிப்பு; அமைதி காக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் கலவரம் நீடிக்கிறது. வன்முறையைக் கட்டுப் படுத்த ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டு வருகின்றனர். குவாஹாட்டி யில் போலீஸார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந் தனர். அந்த நகரில் ஊரடங்கு உத் தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநில மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். அவர் கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் மதரீதியான துன்புறுத் தல்களால் பாதிக்கப்பட்டு இந்தியா வில் அடைக்கலம் புகுந்த இந்துக் கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், புத்த மதத்தினருக்கு இந்திய குடி யுரிமை வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத் தில் இருந்து அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் ஏராளமா னோர் சட்டவிரோதமாக குடியேறி யுள்ளனர். அவர்களில் இந்துக் களுக்கு, புதிய மசோதாவின்படி இந் திய குடியுரிமை கிடைக்க வாய்ப்புள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுரா, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங் களில் பல்வேறு அமைப்புகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றன.

அசாமின் குவாஹாட்டி நகரில், கல்லூரி மாணவர்கள் போராட் டத்தை முன்னின்று நடத்தி வருகின்ற னர். அந்த மாநிலத்தில் திப்ருகார், பானிடோலா உள்ளிட்ட 4 ரயில் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட் டது. ஏராளமான அரசு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன் முறையைக் கட்டுப்படுத்த குவா ஹாட்டி, தேஜ்பூர், தெகியஜூலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப் பட்டுள்ளது. மொபைல் போன் சேவை, இணைய வசதி துண்டிக்கப் பட்டிருக்கிறது. பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளது.

போலீஸ் துப்பாக்கிச்சூடு

ஊரடங்கை மீறி குவாஹாட்டி யில் நேற்று ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டு களை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய குவாஹாட்டி காவல் ஆணையர் தீபக் குமார் நீக்கப்பட்டு, முன்னா பிரசாத் குப்தா புதிய ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். சிஐடி கூடுதல் டிஜிபி பிஸ்னோய், போலீஸ் பயிற்சி துறைக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். திரிபுரா தலைநகர் அகர்தலா உட்பட அந்த மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் நேற்று போராட் டம் நடைபெற்றது. சாலைகளில் டயர்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட் டன. அரசு அலுவலகங்களில் மிகக் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்தனர். பல்வேறு பகுதிகளில் போலீஸாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அசாம், திரிபுரா மாநிலங்களில் கலவரம் வேகமாகப் பரவி வரு கிறது. இதை கட்டுப்படுத்த ராணு வம், மத்திய பாதுகாப்புப் படை களைச் சேர்ந்த வீரர்கள் குவிக்கப் பட்டு வருகின்றனர். வடகிழக்கின் இதர மாநிலங்களிலும் போராட்டங் கள் தொடர்வதால் பதற்றம் நீடிக்கிறது. வடகிழக்கில் ரயில், பேருந்து சேவை முடங்கியுள்ளது. விமானங் களும் இயக்கப்படவில்லை. பெட் ரோல், டீசல் மற்றும் அத் தியாவசிய பொருட்களுக்கு தட் டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மொய்தீன் இந்தியாவில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவர் திடீரென தனது பயணத்தை ரத்து செய்து விட்டார்.

பிரதமர் வேண்டுகோள்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத் தின் தன்பாத் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:குடியுரிமை திருத்த மசோதா வால் நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். குறிப்பாக, இந்த சட்டம் வடகிழக்கு மாநில மக்களுக்கு பாதகமாக இருக்கும் என கூறி வருகின்றனர். இதில் உண்மை இல்லை. அசாம் உட்பட வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மாநில மக்கள் குறிப்பாக பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கும்.

இந்த விவகாரத்தில் அசாம் மாநில சகோதர, சகோதரிகள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவர் களுடைய பாரம்பரியம், கலாச் சாரம் மற்றும் வாழ்வியல் முறைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மக்கள் அமைதி காக்க வேண்டும்.

நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, நாட்டு நலன் தொடர்பான கடுமையான முடிவு களை எப்போதும் தவிர்த்துக் கொண்டே வந்துள்ளது. சில பிரி வினரின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதே இதற்குக் கார ணம். ஆனால், நாங்கள் வாக்கு களைப் பற்றி கவலைப்படாமல் நாட்டு மக்களின் நலனுக்காக பாடு படுவதில் நம்பிக்கை வைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x