Published : 12 Dec 2019 09:43 AM
Last Updated : 12 Dec 2019 09:43 AM

ஜார்க்கண்ட்:  பலத்த பாதுகாப்புடன் 17 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட் மாநில தேர்தல்கள் 5 கட்டங்களாக நடைபெறுகின்றன, இதில் 3ம் கட்ட வாக்குப்பதிவுகள் டிசம்பர் 12ம் தேதியான இன்று காலை தொடங்கியது.

பலத்த பாதுகாப்புடன் 17 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. ராஞ்சி, ஹேதியா, காங்கே, பர்கதா, ராம்கார் தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும் வேளையில் மற்ற தொகுதிகளில் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும்.

8 மாவட்டங்களில் மொத்தம் 17 தொகுதிகளில் 56,18,267 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில், 26, 80,205 பெண் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 86 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள்.

மொத்தம் 309 வேட்பாளர்கள், இதில் 32 பெண் வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் களத்தில் இருக்கிறார்கள்.

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான மொத்தம் 81 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் 5 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

இந்த 17 தொகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பெல்ட் தொகுதிகளும் அடங்கும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 7016 வாக்குச்சாவடிகளில் இன்று1008 தொகுதிகள் நெருக்கடி தொகுதிகளாகவும் 543 தொகுதிகள் ‘சென்சிட்டிவ்’ தொகுதிகளாகவும் கூறப்பட்டுள்ளன.

வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x