Published : 12 Dec 2019 08:01 AM
Last Updated : 12 Dec 2019 08:01 AM

குடியுரிமை சட்ட திருத்த மசோதா சொல்வது என்ன?

புதுடெல்லி

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவையிலும் இது தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

1. பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளி யேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.

ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம். இந்த அம்சத்தில்தான் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

2. இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத் தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர் களுக்கு இந்தியக் குடியுரிமை வழங் கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் குடியேறி யவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதா வில் கூறப்பட்டுள்ளது.

3. மதச்சார்பின்மை எனும் இந்தியா வின் அடித்தளத்தையே இது சிதைத்து விடும் என்று இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க் கின்றன. மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படு வதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

இந்திய அரசமைப்பு சட்டம் மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்றும், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது மதபாகுபாட்டுக்கும் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்று எதிர்க்கட்சியினத் தெரிவிக்கின்றனர்.

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் முஸ்லிம்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிங்கயாக்களை யும் விட்டுவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பு கின்றன.

மத சிறுபான்மையினருக்கானது

4. ஆனால் மத்திய அரசு தரப்பில் இதுகுறித்து தெரிவிக்கும்போது, ‘பாகிஸ்தான், வங்கதேசத்தில் மதச் சிறுபான்மை மக்கள் அங்கு வலுக் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படு கிறார்கள் அல்லது கொல்லப்படு கிறார்கள். இதற்கு அஞ்சி அங்கிருந்து பலர் தங்கள் குடும்பத்தையும், மதத் தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தி யாவுக்கு வந்துள்ளார்கள். பாகிஸ் தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்கள் 20 சதவீதத் துக்கும் குறைந்துவிட்டது. இந்த 3 நாடு களும் சிறுபான்மை மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கவில்லை. மத ரீதியாக துன்புறுத்தல்களை சந்தித்து இந்தியாவில் அடைக்கலம் வந்து பரிதாபமான வாழ்க்கையை வாழும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரி மைத் திருத்த மசோதா நிச்சயம் மிகப்பெரிய நிம்மதியை வழங்கும்’ என்கிறது.

பாஜக தேர்தல் வாக்குறுதி

5. 2019 மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்படும் என அறிவித்தது. அதன்படி தற்போது மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

6. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கின்றன. மேலும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

7. இந்த மசோதா அமலானால், வட கிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத மாக குடியேறியிருக்கும் வெளிநாடு களைச் சேர்ந்தவர்களால் தங்களது வேலைவாய்ப்புக்கு பாதிப்பு வந்து விடும் என வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சுகிறார்கள்.

பாதிப்பு இருக்காது

8. ஏழு வடகிழக்கு மாநிலங்களும் இதனால் பாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. பலமுறை நடந்த விவாதத்துக்குப் பின்னர் வடகிழக்கு மாநிலங்கள் பாதுகாக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கை களை மத்திய அரசு எடுக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் இந்த மசோதா அமல்படுத்தப்படாது என்றும், இந்தப் பகுதிகளில் உட்கோட்டு அனுமதி பெற்றுச் செல்லும் பகுதியாகவே செயல்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. தற்போது நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அருணாச்சல் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் போது உட்கோட்டு அனுமதி பெறப்பட வேண்டும். அந்தப் பட்டியலில் தற்போது அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, மணிப்பூரும் இணைக்கப்பட்டுள்ளது.

9. இந்த மசோதா மூலம் பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத் திலிருந்து முஸ்லிம் அல்லாத 31,313 பேர் இந்தியாவில் குடியுரிமை பெற வுள்ளனர்.

10. இந்நிலையில்தான் தற்போது மாநிலங் களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x