

பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்த பரிசுப்பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் ரூ.15 கோடி கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று பதிலளித்த கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் ரூ.15.13 கோடி கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டு பிப்.18 முதல் 20 வரை, 2019-ல் ஜன. 27 முதல் ஏப். 1 வரை மற்றும் செப். 14 முதல் அக். 24 வரை என மூன்று முறை ஏலம் விடப்பட்டன.
இதன் மூலம் கிடைத்த ரூ.15.13 கோடி மத்திய அரசின் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டமான நமாமி கங்கே திட்டத்துக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்தார்.