

கர்நாடகாவில் 15 சட்டபேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க் கட்சியான காங்கிரஸ், மற்றொரு பிரதான கட்சியான மஜத இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் ஹொசகோட்டை தொகுதியில் பாஜக சார்பில் போட்டி யிட பாஜக எம்.பி. பச்சே கவுடா வின் மகன் சரத் பச்சே கவுடா விருப்ப மனு அளித்தார். ஆனால் காங்கிரஸ், மஜதவில் இருந்து வந்த 13 பேருக்கு வாய்ப்பு அளிக்க பாஜக மேலிடம் முடிவு செய்ததால், ஹொசகோட்டை தொகுதி ரூ.1,150 கோடி சொத்துகள் கொண்ட எம்.டி.பி.நாகராஜுக்கு போனது.
இதனால் அதிருப்தி அடைந்த சரத் பச்சே கவுடா சுயேச்சையாக களமிறங்கினார். இவரது கோரிக் கையை ஏற்று முன்னாள் முதல்வர் குமாரசாமி, மஜத அங்கு போட்டி யிடாது என அறிவித்தார்.
இதனால் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் பலம் வாய்ந்த வேட்பாளர்களுடன் சரத் பச்சே கவுடா மோதினார். கடந்த 2013 மற் றும் 2018-ல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற தொகுதி என்ப தால் காங்கிரஸார் நம்பிக்கையுடன் இருந்தனர்.
பாஜக வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் பணத்தை வாரியிறைத்த நிலையில், சரத் பச்சே கவுடா அவ ருக்கு இணையாக செலவு செய் தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானபோது சரத் பச்சே கவுடாவும், எம்.டி.பி.நாகராஜும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். 7-வது சுற்றுக்கு பின் எம்.டி.பி.நாக ராஜை பின்னுக்கு தள்ளி சரத் பச்சே கவுடா முன்னிலை வகித்தார். இறுதியில் அவர் 11,846 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து சரத் பச்சே கவுடா, “என்னை நம்பி வாக்களித்த ஹொசகோட்டை தொகுதி மக் களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் பாஜகவில் இணைவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்துபேசி விரைவில் முடிவெடுப் பேன்” என கூறியுள்ளார்.