பஞ்சாபில் நடந்த வேளாண் கண்காட்சியில் 32 கிலோ பால் வழங்கி உலக சாதனை படைத்த எருமை

எருமையின் உரிமையாளர் சுக்பிர் தந்தா (இடது) மற்றும் சங்கத்தின் நிர்வாகி
எருமையின் உரிமையாளர் சுக்பிர் தந்தா (இடது) மற்றும் சங்கத்தின் நிர்வாகி
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலத்தில் சரஸ்வதி என்ற எருமை ஒரு நாளில் 32 கிலோ பால் வழங்கி உலக சாதனை படைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா வின் ஜக்ரான் என்ற இடத்தில், புரக்ரசிவ் டயரி பார்மர்ஸ் அசோசி யேஷன் சார்பில் சர்வதேச பால் பண்ணை மற்றும் வேளாண் கண் காட்சி நடைபெற்றது. இதில், பசு, எருமை, எருது ஆகியவற்றுக்கு பல் வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 7 வயதான சரஸ்வதி என்ற முர்ரா ரக எருமை அதிக பால் வழங்கி உலக சாதனை படைத்தது. கண் காட்சி நடைபெற்ற 3 நாட்களும் சரஸ்வதி வழங்கிய பால் கணக் கிடப்பட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு 32.066 கிலோ பால் வழங்கியது. கண்காட்சி நிறைவு நாளான நேற்று முன்தினம் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதையடுத்து ஏராளமான பார்வையாளர்கள் சரஸ்வதியை பார்வையிட்டனர்.

இதன்மூலம் பாகிஸ்தானின் பைசலாபாத் நகரைச் சேர்ந்த முர்ரா வகை எருமையின் முந் தைய சாதனை முறியடிக்கப்பட் டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தல்ஜித் சிங் சதார்புரா தெரிவித்தார்.

ஹிசார் மாவட்டம் லிடானி கிராமத்தைச் சேர்ந்தவரும் சரஸ்வதி யின் உரிமையாளருமான சுக்பிர் தந்தா இதுகுறித்து கூறும்போது, “சரஸ்வதி அதிக பால் வழங்கி உலக சாதனை படைத்தது எனக்கு மட்டுமல்ல, நம் நாட்டுக்கே பெரு மையாக உள்ளது. இதற்கான பெருமை என் தாய் கைலோ தேவியைத்தான் சேரும். அவர்தான் சரஸ்வதியை நன்கு கவனித்துக் கொள்கிறார்.

இதுதவிர பல போட்டிகளில் சரஸ்வதி எனக்கு பெருமை சேர்த்துள்ளது. சரஸ் வதியை ரூ.51 லட்சம் விலைக்கு கேட்டார்கள். ஆனால் மறுத்துவிட் டேன். சரஸ்வதியின் கன்றுக் குட்டியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.4.5 லட் சத்துக்கு விற்றேன். எங்களிடம் கங்கா, ஜமுனா என மேலும் 2 எருமைகள் உள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in