Published : 11 Dec 2019 07:33 AM
Last Updated : 11 Dec 2019 07:33 AM

குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்; மாநில கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற அரசு தீவிரம்: அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மாநில கட்சி களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மசோதாவை எதிர்த்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. பல் வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. பேருந்து, ரயில் சேவை முடங்கியது. இணைய சேவை, எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப் பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், புத்த மதத்தினர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 9 மணி நேரம் விவா தம் நடைபெற்றது.

இறுதியில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். அவர் கூறும்போது, "குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதிக்கப்படாது. அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் வசிக் கும் பகுதிகளுக்கு இந்த மசோதா வில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. இதேபோல வட கிழக்கில் 'இன்னர் லைன் பெர் மிட்' மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதிகளுக்கும் மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள் ளது" என்று தெரிவித்தார்.

நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 311 எம்.பி.க்களின் ஆதர வுடன் மசோதா நிறைவேறியது. எதிராக 80 பேர் வாக்களித்தனர்.

மாநிலங்களவை பலம்

குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அவையில் மொத்தம் 238 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 105 எம்.பி.க்களின் பலம் உள்ளது. மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

அதிமுக 11, பிஜு ஜனதா தளம் 7, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 2, தெலுங்கு தேசத்துக்கு 2 உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இந்த கட்சிகள் ஆதரவு அளித்தன. எனவே மாநிலங்களவையிலும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நிச்சயமாக ஆதரவு அளிக்கும். இதன்மூலம் மசோதா எளிதாக நிறைவேறும் என்று பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

வாகனங்களுக்கு தீவைப்பு

குடியுரிமை திருத்த மசோ தாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அசாம் மாணவர்கள் கூட்ட மைப்பு, வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு நடத்திய இந்த போராட்டத்தில் வன்முறை வெடித் தது. குவாஹாட்டியில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடை பெற்றது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அசாமின் பல்வேறு நகரங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அரசு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவை, எஸ்எம்எஸ் சேவை ரத்து செய்யப் பட்டன.

அசாம் மட்டுமன்றி திரிபுரா, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த மாநிலங்களிலும் வன்முறை சம் பவங்கள் ஏற்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மாநிலங்களிலும் பதற்றமான பகுதிகளில் இணைய சேவை, எஸ்எம்எஸ் சேவை நிறுத்தப்பட் டது. நாகாலாந்தில் பழங்குடியினர் திருவிழா நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் மட்டும் முழு அடைப்பு நடத்தப்படவில்லை.

அசாம் மாணவர்கள் கூட்டமைப் பின் தலைவர் திபான்கர் குமார் நாத் கூறும்போது, "குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். எந்த சூழ்நிலையிலும் மசோதாவை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "இந்திய அரசமைப்பு சாசனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள், நாட்டின் அஸ்திவாரத்தின் மீதே தாக்குதல் நடத்துகிறார்கள்" என்று தெரி வித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் வெளி யிட்ட பதிவில், "நாட்டின் அரசமைப்பு சாசனத்தை அழிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதற்கு எதி ராகப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில், "குடியுரிமை திருத்த மசோதா நாட்டின் அரசியல் சாசன அமைப்புக்கு விரோத மானது. இந்த போர்க்களம் உச்ச நீதிமன்றத்துக்கு இடம் மாறும்" என்று கூறியுள்ளார்.

எச்.ராஜா கேள்வி

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்தியாவை மத அடிப்படையில் வெட்டிப் பிளந்த காங்கிரஸ் இன்று கூச்சலிடுகிறது. 1947-ல் இருந்து பாகிஸ்தான், வங்கதேசத்தில் கொல்லப்பட்ட, இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தயாரா?’ என்று கூறியுள்ளார்.

சிவசேனாவின் நிலை

மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு அளித்தது. நாட்டின் நலன் கருதி மசோதாவுக்கு ஆதரவு அளித்ததாக அந்த கட்சியின் எம்.பி. அரவிந்த் சாவந்த் தெரிவித்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் நேற்று கூறும் போது, "மசோதாவில் சில திருத்தங் களை கோரியுள்ளோம். அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாநிலங்களவையில் ஆதரவு அளிப்போம்" என்று தெரிவித்தார். மாநிலங்களவையில் சிவசேனா வுக்கு 3 எம்.பி.க்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x