

வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினின் விசா காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
தனது விசா காலத்தை மேலும் நீட்டிக்கச் சொல்லி தஸ்லீமா நஸ்ரின் கடந்த சில மாதங்களாக மத்திய அரசிடம் கோரி வந்தார். இந்த விஷயத்தில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு ஆலோசனைகள் நடத்தி, தற்போது நஸ்ரினின் விசா காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, "ஓர் ஆண்டுக் கும் அதிகமாக எனது விசா காலம் நீட்டிக்கப்படும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். எனினும், இதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இது வரவேற்புக்குரிய விஷயம்" என்றார். மத அடிப்படை வாதிகளின் எதிர்ப்பு காரணமாக 1994ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து தஸ்லீமா நாடு கடத்தப் பட்டார். பின்னர் ஸ்வீடன் நாட்டு குடியுரிமையைப் பெற்றார். அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பா விலும் தங்கி வந்தார்.