Published : 10 Dec 2019 09:20 AM
Last Updated : 10 Dec 2019 09:20 AM

உங்களது இந்தியா பிரிவினைவாதத்தை தூண்டுவது: குடியுரிமை மசோதாவை கடுமையாக விமர்சிக்கும் திரிணமூல்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வரும் இந்துக்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியதையடுத்து திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, இந்த மசோதா இந்தியாவுக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த மசோதா இருதயத்தை நொறுக்குவது என்று கூறிய அபிஷேக் பானர்ஜி, “இது எனக்கு பெரிய கவலையையும் வலியையும் தருகிறது. நமது இந்தியா அமைதிக்கும் சமாதானத்திற்கும் பெயர் பெற்றது. ஆனால் உங்கள் இந்தியா என்ற கருத்து கும்பல் கொலைக்கானது. நம் இந்தியா அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குவது, உங்கள் இந்தியா பிரிவினைவாதத்துக்குரியது.

ஏன் பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேச அகதிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்? இலங்கை இருக்கிறது, மியான்மர் இருக்கிறது. இவையும் பிரிட்டீஷ் இந்தியாவைச் சேர்ந்ததுதான், ஏன் இந்த நாடுகளின் அகதிகள் பற்றி பரிசீலிக்கவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு ஒரு சீரழிவு. அது ஒரு மாநிலத்தில் தோல்வியடைந்தும் நீங்கள் அதனை பிற மாநிலங்களிலும் நடத்திக் காட்டுவது என்று துடிக்கிறீர்கள். இந்த மசோதா இந்தியாவுக்கு எதிரானது, பெங்காலுக்கு எதிரானது” என்று விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x