

ஆர். பாலசரவணக்குமார்
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை நடக்கிறது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட் சித் தேர்தலை நடத்தலாம் எனவும், ஆனால், தமிழ்நாடு பஞ்சாயத்து விதிகள் 1995-ல் உள்ள விதி 6-ன்படி உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படை யில் பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப் பினருக்கு உரிய இடஒதுக்கீடு மற் றும் சுழற்சி முறைகளை வழங்க வேண்டும் எனவும் கடந்த டிச.6-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்த மறுநாளே, அதாவது டிச.7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அவசரம் அவசரமாக 9 மாவட்டங் கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடக் கும் என அறிவிப்பாணை வெளி யிட்டுள்ளது. அந்த அறிவிப்பாணை யில் கடந்த 2016-ம் ஆண்டு வெளி யிடப்பட்ட அறிவிப்பாணையில் உள்ளபடி இடஒதுக்கீடு முறைகள் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு அறி விப்பாணையில், 1991-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை பணி நடந்துள்ளது. வார்டு, அவற்றின் எல்லை, மக்கள்தொகை என அனைத்தும் மாறுபட்டுள்ள நிலையில், இட ஒதுக்கீடு மட்டும் 2011 மக்கள் தொகை அடிப்படையில் வழங்கா மல், 1991 மக்கள்தொகை கணக் கெடுப்பின்படி வழங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல. அது சட்டவிரோதமானதும்கூட.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட் டங்களுக்கும் மறுவரையறைப் பணிகளை முடித்தால் மட்டுமே விகிதாச்சார இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி பணிகளும் சட்டரீதியாக பூர்த்தியடையும்.
ஆனால் இந்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் சட்ட ரீதியாக மேற்கொள்ளாமல், அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனையும் நடத்தா மல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக அவசர கதியில் உள்ளாட்சித் தேர் தல் அறிவிப்பாணையை வெளியிட் டுள்ளது. எனவே, டிச.7-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பா ணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியுள்ளார்.
இதே கோரிக்கையை வலி யுறுத்தி காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
திமுக சார்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவை அவசர வழக் காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் திமுக சார்பில் மூத்த வழக் கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் நேற்று முறை யீடு செய்தனர். அதையடுத்து இது தொடர்பான அனைத்து மனுக் களும் டிச.11-ம் தேதி (நாளை) விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதற்கிடையே, மேயர் மற்றும் நகராட்சி,பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பிறப்பிக்கப்பட்டுள்ள அவ சரச் சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமா வளவன் மனு தாக்கல் செய்து உள்ளார்.