Last Updated : 10 Dec, 2019 08:25 AM

 

Published : 10 Dec 2019 08:25 AM
Last Updated : 10 Dec 2019 08:25 AM

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா: இடைத்தேர்தலில் 12 இடங்களில் பாஜக வெற்றி காங்கிரஸ் 2, சுயேச்சை 1, மஜத அனைத்து தொகுதிகளிலும் தோல்வி

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக 12 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளதால், முதல்வர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளார். காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்று, படுதோல்வி அடைந்துள்ளதால் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கர்நாடகாவில் முந்தைய குமார சாமி தலைமையிலான மஜத- காங் கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்எல்ஏக் கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்தது. இந்த 17 எம்எல்ஏக் களையும் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து, இடைத்தேர்தலில் போட்டியிடவும் தடைவிதித்தார். இதை எதிர்த்து 17 பேரும் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம், தகுதி நீக்கம் செல் லும் எனவும், இடைத்தேர்தலில் போட்டியிடத் தடையில்லை எனவும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவையில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர், மாஸ்கி ஆகிய இரு தொகுதி களை தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த 13 தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித் தது. அக்கட்சியினர் அதிருப்தி அடைந்த நிலையில், ஹொசக் கோட்டை தொகுதியின் முன் னாள் பாஜக எம்எல்ஏ சரத் பச்சேகவுடா சுயேச்சையாக களமிறங்கினார்.

ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மஜத ஆகிய மூன்று பெரிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 15 தொகுதிகளில் 6 இடங்களில் வென்றால் மட்டுமே பாஜக ஆட்சியைக் காப்பாற்ற முடி யும் என்பதால் முதல்வர் எடியூரப்பா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதேவேளையில் பாஜகவை தோற் கடித்து மீண்டும் கூட்டணி ஆட்சியை உருவாக்க காங்கிரஸ், மஜத தலைவர்களும் முயற்சித்தனர்.

இந்நிலையில் 15 தொகுதிகளில் பதிவான 67.91 சதவீத வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொட‌ங்கியது. ஆரம்பம் முதலே சிக்கப்பள்ளாப்பூர், யஷ் வந்த்பூர், கே.ஆர்.பேட்டை உள் ளிட்ட 10 தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருந்தது. 4-வது சுற்று வாக்குகள் முடிவு வரைக்கும் காங்கிரஸ் 3, மஜத 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தன.

அடுத்தடுத்த சுற்றுகளின் முடி வில் பாஜக 12, காங்கிரஸ் 2 (சிவாஜி நகர், ஹூன்சூர்), முன்னிலை பெற்ற நிலையில் மஜத மிகவும் பின்தங் கியது. இதில் யாரும் எதிர்பாராத நிலையில் ஹொசகோட்டையில் பாஜக வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா முன்னிலை பெற்றார்.

மாலை 5 மணிக்கு மேல் சிக்கப் பள்ளாப்பூர், யஷ்வந்த்பூர், கே.ஆர். பேட்டை உள்ளிட்ட 12 தொகுதி களில் அதிக வாக்குகள் வித்தியாசத் தில் பாஜக வெற்றி பெற்றது. சிவாஜிநகர் (ரிஷ்வான் அர்ஷத்), ஹூன்சூர் (மஞ்சுநாத்) ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. மஜத 15 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில், ஹொசகோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதால் கர்நாடகா முழு வதும் பாஜகவினர் மேள தாளம் முழங்கியும், இனிப்புகள் வழங்கி யும் உற்சாகமாக கொண்டாடினர். பிரதமர் மோடி, உள்துறை அமைச் சர் அமித் ஷா, பாஜக செயல் தலை வர் ஜே.பி.நட்டா ஆகியோர் எடி யூரப்பாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

நிலையான ஆட்சி

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 6 இடங்களில் வென்றால் போதும் என்ற நிலை யில், பாஜக 12 இடங்களில் வென் றுள்ளதால் முதல்வர் எடியூரப்பா தனது ஆட்சியை தக்க வைத் துள்ளார். இந்த வெற்றியின் மூலம் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள எடியூரப்பா தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றிய தனது மகன் விஜயேந்திராவுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

இதுகுறித்து எடியூரப்பா கூறுகை யில், ‘‘இதுவரை காங்கிரஸ், மஜத வசம் இருந்த தொகுதிகளிலும் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து, மாபெரும் ஆதரவை வழங்கியுள்ள னர். பாஜக இதுவரை வெற்றி பெறாத, எனது சொந்த ஊர் உள்ள கே.ஆர்.பேட்டை தொகுதியில் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக் கிறது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் காங்கிரஸ், மஜத தலைவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. எதிர்க் கட்சிகளைப் பற்றி குற்றம் சொல் வதற்கு நேரம் ஒதுக்காமல் நிலை யான ஆட்சி வழங்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். இடைத் தேர்தலில் வென்ற புதிய எம்எல்ஏக் களுக்கு அமைச்சர் பதவி வழங்கு வது குறித்து விரைவில் டெல்லி சென்று மேலிடத் தலைவர் களுடன் ஆலோசித்து முடிவெடுக் கப்படும்''என்றார்.

இதனிடையே, இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சித்தராமையா எதிர்க்கட்சி தலை வர் பதவியையும், தினேஷ் குண்டுராவ் கர்நாடக மாநில‌ காங்கிரஸ் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x