

‘பானிபட்’ இந்தி திரைப்படத்துக்கு ஜாட் சமூகத்தில் கிளம்பியுள்ள எதிர்ப்புக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவளித்து உள்ளார். இதில் தவறான வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் அப்படத்துக்கு தடை கோரி போராட்டம் துவங்கி உள்ளது.
கடந்த வாரம் 6-ம் தேதி அசுதோஷ் கவுரிக்கரின் ‘பானிபட்’ என்னும் இந்தி திரைப்படம் வெளியானது. இதன் கதை, 1761-ம் ஆண்டு மராட்டிய மன்னர் பாலாஜி பாஜிராவ் பேஷ்வாவுக்கும் ஆப்கன் அரசர் அகமது ஷா அப்தாலிக்கும் இடையே நடை பெற்ற மூன்றாவது பானிபட் போரை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மராட்டிய மன்னருக்கு போரில் உதவிய ஜாட் மகாராஜா சூரஜ்மாலை பற்றிய தகவல்கள் தவறாக சித்தரிக்கப் பட்டு இருப்பதாகப் புகார் எழுந் துள்ளது. இதனால், படம் வெளி யானது முதல் பானிபட் படத்தை தடை செய்யக்கோரி ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் உ.பி.யில் போராட்டம் நடைபெற்று வருகின் றன. படத்தைத் தடை செய்யக் கோரும் ஜாட் சமூகத்தினருக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவளித்துள்ளார்.
அசோக் கெலாட் ஆதரவு
இது குறித்து அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், “பானிபட் படத்தில் மகாராஜா சூரஜ்மால்ஜி தவறாக சித்தரிக்கப்படுவது குறித்து தணிக்கை வாரியம் தலையிட்டு அதை அறிந்து கொள்ள வேண் டும். பட விவகாரம் குறித்து விநியோகஸ்தர்கள் உடனடியாக ஜாட் சமுதாய மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். எந்தவொரு சாதி, மதம், வர்க்கத்தின் பெரிய மனிதர்களையும் கடவுள்களையும் அவமதிக்கக்கூடாது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தில் சர்ச்சைக்கு காரணமான ராஜஸ்தானின் பரத்பூர் மகாராஜா சூரஜ்மாலின் 14-வது வம்சத்தில் வந்தவராகக் கருதப்படும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஸ்வேந்திர சிங்கும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். பானிபட் போரில் தோல்வியடைந்து மராட்டிய மன்னர் பேஷ்வா மற்றும் அவரது படையினருக்கு மகாராஜா சூரஜ் மால் 6 மாதங்கள் அளித்த அடைக் கலத்துடன், பல வரலாற்று உண் மைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக் கட்சியின் மாநிலத் தலைவர் சதீஷ் பூர்ணியா, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மக்களவை எம்.பி. ஹனுமன் பேனிவால் ஆகியோரும் படத்துக்கு எதிராகக் கருத்து கூறியுள்ளனர்.
இதில் அவர்கள், மகாராஜா சூரஜ்மாலை பேராசை கொண்ட ஆட்சியாளர் என்றும், பிரஜ் தவிர வேறு மொழி பேசுவதை சூரஜ்மால் எதிர்ப்பதாகவும் காட்டி யிருப்பது தவறு எனவும் குறிப்பிட் டுள்ளனர். இதனிடையே, ஜெய்ப் பூரில் பானிபட் படம் திரையிட்ட திரையரங்குகளில் நேற்று ஜாட் சமூக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கல்வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’ எனும் இந்தி திரைப்படத்துக்கும் ராஜஸ் தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் அப்படத் தில் சில மாற்றங்கள் செய்து படம் வெளியிடப்பட்டது நினைவுகூரத் தக்கது.