

ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பெருமளவில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை நேற்று தற்காலிக நிறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கெரி என்ற இடத்தில் பெருமளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஜம்மு, பகவதி நகர் முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை நேற்று நிறுத்தப்பட்டது.
ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் இரு வழிகளிலும் ஆங்காங்கே வாகனங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை சாலைகள் நிறுவனத்தின் (பிஆர்ஓ) பணியாளர்கள் சாலை சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.