Last Updated : 09 Dec, 2019 11:09 AM

 

Published : 09 Dec 2019 11:09 AM
Last Updated : 09 Dec 2019 11:09 AM

உ.பி.யில் பாதுகாவலர்களை நியமித்த அரசுக்கு பல லட்சம் கட்டண பாக்கி வைத்திருக்கும் விஐபிகள்

கோப்புப்படம்

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் பாதுகாவலர் களை நியமித்த அரசுக்கு, அதற்காக செலுத்த வேண்டிய பல லட்சம் ரூபாய் கட்டணத்தை விஐபிகள் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடனான முக்கிய பிரமுகர்கள் (விஐபி) அதிகம். இவர்களில் பெரும்பா லானவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதை வைத்தே அவர்களின் சமூக அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. துப்பாக்கி வைத்திருக்கும் பாதுகாவலர்களின் எண்ணிக்கையை பொறுத்து விஐபிகளுக்கு பொது இடங்களில் முக்கியத்துவம் கிடைப்பதும் வழக்கம்.

மாநில அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் எம்பி-க்களுக்கு அரசு செலவில் ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்கப்படு கிறது. இதைவிட கூடுதல் பாது காப்பு வேண்டுமானால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் பதவியில் இல்லாத அரசியல்வாதிகளும், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்ப தாகக் கூறி பாதுகாப்பு வழங்கு மாறு கோர முடியும்.

இந்தக் கோரிக் கையை மாவட்ட காவல் துறை உறுதி செய்த பின்னர் 3 மாதங் களுக்கு பாதுகாப்பு வழங்கும். இதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். பாதுகாப்பை நீட்டிக்க வேண்டுமானால் டிஐஜி முதல் டிஜிபி வரையில் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகும் நிரந்தர மாக பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதுகுறித்து மாநில அரசு முடிவு செய்யும்.

இதுபோன்ற சூழலில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளே பாதுகாவ லர் வசதியை அதிக அளவில் அனு பவித்து வருகின்றனர். இவர்களில் பலர் உரிய கட்டணத்தை அரசுக்கு செலுத்துவதில்லை. இதுபோன்ற வர்களை கணக்கெடுத்து, அவர் களிடம் நிலுவைத் தொகையை வசூலிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அலிகர் மாவட்டத்தில் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பில் அங்குள்ள விஐபிகள் ரூ.30 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதேபோல பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஐபிகளும் கட்டண பாக்கி வைத்துள்ளனர்.

அலிகரில் கட்டண பாக்கி வைத் திருப்பவர்களில் பாஜகவினர் முதலிடத்திலும் சமாஜ்வாதி கட்சி யினர் 2-ம் இடத்திலும் உள்ளனர். இவர்களில் முன்னாள் எம்பி, எம்எல்ஏ, கட்சியின் மாவட்ட நிர்வாகி கள் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக, தாங் கள் செல்லும் இடங்களுக்கும் பாதுகாவலர்களை அழைத்து செல் கிறார்கள். அரசு பாதுகாவலர் எண் ணிக்கை குறைவாக இருந்தால் தனியாரையும் அப்பணிக்கு சேர்த் துக் கொள்பவர்களும் உண்டு.

உ.பி.யில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாலி கட்டுவது உள்ளிட்ட முக்கிய சடங்குகளின் போது, கொட்டும் மேள சத்தத்தை விட துப்பாக்கிகளின் சத்தமே முக்கியத்துவம் பெற்றன. இந் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் விஐபி களின் பாதுகாவலர்கள், துப்பாக் கியை வானத்தில் சுட்டு மகிழ்வது உண்டு.

இதில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வந்த விஐபி கள் எண்ணிக்கையை பொறுத்து அந்த நிகழ்ச்சியின் சிறப்பு அமை கிறது. இதனால், நிகழும் விபத்தில் மாப்பிள்ளைகள் உட்பட மேலும் சிலர் உயிரிந்துள்ளனர். இதை யடுத்து, அரசு கடும் கட்டுப்பாடு களை விதித்ததால் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் குறைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x