தெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால் அவரே சுட்டுக் கொன்றிருப்பார்: விமர்சனங்களுக்கு சாய்னா நெவால் பதிலடி

தெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால் அவரே சுட்டுக் கொன்றிருப்பார்: விமர்சனங்களுக்கு சாய்னா நெவால் பதிலடி
Updated on
1 min read

தெலுங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒருவேளை துப்பாக்கி இருந்திருந்தால் குற்றவாளிகளை சுட்டுக் கொண்டிருப்பார் என தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கிறார்

தெலங்கானா பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதற்காக ஹைதராபாத் போலீஸாருக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் என்கவுன்ட்டரை புகழ்ந்த சாய்னாவின் கருத்தை எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் விமர்சித்திருந்தனர்.

இதில் எழுத்தாளரும் , பத்திரிகையாளருமான அன்னா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சானியாவை குறிப்பிட்டு, “உங்களிடமிருந்து வந்த இந்தக் கருத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதற்காக உங்களுக்கு கரகோஷம் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் நீங்கள் இதன் மூலம் செய்திருக்கும் தீங்கு அளவிட முடியாதது. . இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும் முன் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு கூறுமாறு உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளித்திருக்கிறார் சாய்னா நேவால் பதிலளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “ பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்த கொடுமையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. குற்றவாளிகள் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதில் எனக்கு கைத்தட்டல் தேவையில்லை. உங்களுடைய கருத்து பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளின் எண்ணத்தையோ அல்லது சட்டத்தையோ மாற்ற போவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒருவேளை துப்பாக்கி இருந்தாலும் நிச்சயம் அவர் அவர்களை சுட்டிருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in