டெல்லி தீ விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி; பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி தீ விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on

டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மத்திய டெல்லியில் பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அதிகாலை தீ விபத்து நடந்துள்ளது. தொழிற்சாலைக்குள் பை தயாரிக்கும் இயந்திரம் இருந்த பகுதியில் இருந்தே தீ பரவத் தொடங்கியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டபோது 50 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். அதிகாலை 5 மணி என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாவது:

‘‘டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதுபோலவே பலத்த காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in