

கால்நடை டாக்டர் பிரியங்கா கொலை வழக்கில் கைது செய் யப்பட்ட 4 பேர், ஹைதரா பாத் அருகே நேற்று முன்தினம் அதிகாலை போலீஸ் என்கவுன்ட் டரில் கொல்லப்பட்டனர்.
இதனை தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமானோர் கொண்டாடினர். ஹைதராபாத்தில் போலீ ஸாருக்கு பெண்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடா புது அரசு மருத்துவமனை அருகே டீக்கடை வைத்திருப்பவர் சத்தியநாராயண ராவ். இவர் என்கவுன்ட்டர் தகவல் அறிந்த தும் அன்று காலை 7 மணி முதல் இரவு வரை தனது வாடிக் கையாளர்களுக்கு தொடர்ந்து டீ, காபி போன்றவற்றை இலவசமாக வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவர் 3 பெண் குழந்தைகளுக்கு தந்தை என்பது குறிப்பிடத் தக்கது.