லஞ்ச புகார் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்கு பதிவு

லஞ்ச புகார் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத 45-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று கடந்த 2017-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இதில் லக்னோவை சேர்ந்த பிரசாத் அறக்கட்டளை நடத்தி வரும் பிரசாத் மருத்துவக் கல்லூரியும் ஒன்றாகும்.

மருத்துவ கவுன்சில் உத்தரவை எதிர்த்து பிரசாத் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. அதன் பிறகு பிரசாத் அறக்கட்டளை சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி எஸ்.என்.சுக்லா, அறக்கட்டளைக்கு சாதகமாக தீர்ப்பளித்தார்.

லஞ்சம் பெற்றுக் கொண்டு பிரசாத் அறக்கட்டளைக்கு சாதக மாக நீதிபதி சுக்லா தீர்ப்பளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி வழங்கினார்.

இதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி, நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது நேற்று முன்தினம் ஊழல் வழக்கினை பதிவு செய்தது. அவருக்கு சொந்தமான வீடு, இடங் களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப் பற்றப்பட்டன. இதே ஊழல் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி குத்தூஸி உள்ளிட்டோர் மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in