

தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத் திய வெளியுறவுத் துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.
சிறுமிகள் கடத்தல் புகாரின் பேரில், குஜராத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சோதனையிடுமாறு அகமதாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் நடத்தப் பட்ட சோதனையில், பல சிறுமி கள் அங்கு சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, நித்தியானந்தாவின் முன்னாள் பெண் சீடர்கள் சிலர், அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை தேடி வந்தனர்.
இதனிடையே, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாருக்கு நித்தியானந்தா தப்பிச் சென்று விட்டதாகவும், அங்கு ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை தனி நாடாக அவர் அறிவித்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஈக் வடார் அரசு இதை திட்டவட்ட மாக மறுத்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறியதாவது:
நித்தியானந்தாவின் பாஸ் போர்ட் ரத்து செய்யப்பட்டிருக் கிறது. மேலும், புதிய பாஸ்போர்ட் டுக்காக அவர் அளித்திருந்த விண் ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா தேடப்படும் நபர் என உலக நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.