Published : 07 Dec 2019 08:22 AM
Last Updated : 07 Dec 2019 08:22 AM

கொலை முதல் என்கவுன்ட்டர் வரை....

நவம்பர் 27

இரவு 9.30 மணி

தெலங்கானாவைச் சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் பிரியங்காவின் இருசக்கர வாகனம் பஞ்சராகி உள்ளது.

இரவு 10 மணி

பிரியங்காவுக்கு உதவி செய்வதாக லாரி டிரைவர்கள் 4 பேர் அவரை அணுகுகின்றனர். இதனை பிரியங்கா தனது தங்கையிடம் செல்போனில் தெரிவிக்கிறார்.

நள்ளிரவு 1 மணி

பிரியங்கா வீடு திரும்பாததால் அச்சமடைந்த அவரது பெற்றோர், அவர் இருப்பதாக கூறிய இடத்துக்கு வருகின்றனர். அப்போது, பிரியங்காவின் இருசக்கர வாகனம் மட்டும் அங்கு இருந்துள்ளது.

நவம்பர் 28

அதிகாலை 3 மணி

இதையடுத்து, பிரியங்காவை காணவில்லை என ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளிக்கின்றனர்.

காலை 9 மணி

ரங்காரெட்டி மாவட்டம் சட்டான்பல்லி பாலத்தின் கீழே பிரியங்கா எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை போலீஸார் கண்டறிந்தனர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக 15 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன.

நவம்பர் 29

காலை 6 மணி பிரியங்காவை பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொலை செய்ததாக முகமது ஆரிப், சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகிய லாரி டிரைவர்களை போலீஸார் கைது செய்கின்றனர்.

நவம்பர் 30

மதியம் 2 மணி: குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனைத் தொடர்ந்து, சேர்லப்பள்ளி மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்படுகின்றனர்.

டிசம்பர் 1

இந்தக் கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு.

டிசம்பர் 3

மகபூப்நகர் மாவட்ட நீதிமன்றத்தையே விரைவு நீதிமன்றமாக தெலங்கானா அரசு அறிவித்தது.

டிசம்பர் 4

குற்றம்சாட்டப்பட்டவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.

டிசம்பர் 6

அதிகாலை 5 மணி: குற்றம்சாட்டப்பட்டவர்களை சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, போலீஸாரை தாக்கி தப்ப முயற்சித்த அவர்கள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x