

தெலங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட் டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸாருக்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
அப்பெண்ணின் தந்தை கூறும் போது, “எனது மகள் இறந்து 10 நாள் ஆகிறது. இந்த நடவடிக்கைக்காக போலீஸாருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது மகளின் ஆன்மா இப்போது அமைதி அடைந்திருக்கும்” என்றார்.
ஹைதராபாத் அருகே கடந்த 28-ம் தேதி அப்பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டிய அவரது சகோதரி கூறும்போது, “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த நடவடிக்கை ஓர் உதாரணமாக இருக்கும். இதுபோன்ற குற்றத்தை செய்ய இனி எவரும் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். எங்களை ஆதரித்த பொதுமக்கள், காவல்துறை, ஊடகம் மற்றும் தெலங்கானா அரசுக்கு நன்றி” என்றார்.
ரோஜா கருத்து: ஆந்திர மாநிலம் நகரியில் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
கால்நடை டாக்டர் பிரியங்கா கொலை சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது. எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற கொடுமை நடக்கவே கூடாது. இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடித்து கைது செய்தது மட்டுமன்றி, வெறும் 10 நாட்களில் அவர்களுக்கு தக்க தண்டனையையும் போலீஸார் வழங்கியுள்ளனர். இதற்காக தெலங்கானா போலீஸாரை நான் வெகுவாக பாராட்டுகிறேன். இனி அப்பாவி பெண்களை மட்டுமல்ல அவர்களின் நிழலை தொட்டாலே இதுதான் கதி என்பதை குற்ற வாளிகள் நினைவில் கொள்ள வேண்டும். இது பெண்களுக்கு எதி ராக நடந்து கொள்ளும் ஆண் களுக்கு ஒரு பாடம் மட்டுமல்ல, பலமான எச்சரிக்கையும் கூட.
இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்