டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க.. தெலங்கானா என்கவுன்ட்டர் நிகழ்விடத்தில் மலர் தூவி போலீஸாரைக் கொண்டாடிய பொதுமக்கள்; வைரலாகும் வீடியோ

டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க.. தெலங்கானா என்கவுன்ட்டர் நிகழ்விடத்தில் மலர் தூவி போலீஸாரைக் கொண்டாடிய பொதுமக்கள்; வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

தெலங்கானா என்கவுன்ட்டர் நிகழ்விடத்தில் திரண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீஸார் மீது மலர் தூவி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த நவம்பர் 27-ல், தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

இதற்கு நாடு முழுவதும் பரவலாக வரவேற்பும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது. தெலங்கானா மாநில மக்கள் போலீஸாரைக் கொண்டாடி வருகின்றனர்.

நிகழ்விடத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்த போலீஸார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தினர். டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க என கோஷமிட்டனர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் திரண்டு வந்து போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீஸாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர்.

தெலங்கானா முழுவதுமே மக்கள் ஒரேமாதிரியான மகிழ்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in