Published : 06 Dec 2019 09:01 AM
Last Updated : 06 Dec 2019 09:01 AM

நாங்கள் மேட்டுக்குடியினர் என்றால் காங். அமைச்சர் 2012-ல் கூறியது என்னவாம்? - ப.சிதம்பரம் பெயரைக் குறிப்பிடாமல் நிர்மலா சீதாராமன் விமர்சனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதிர்க்கட்சியினர் ‘மேட்டுக்குடி’ பிரிவைச் சேர்ந்தவர் அதனால்தான் வெங்காயம் உள்ளிட்ட விலை உயர்வினால் பாதிக்கப்படும் சாமானியர்கள் பற்றி அக்கறை இல்லை என்று கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

பொருளாதாரம் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன, அரசின் போதாமைகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த அரசு பணக்காரர்களுக்கானது, மேட்டுக்குடியினருக்கானது என்ற விமர்சனத்தை ஏற்க மாட்டோம். ஏழைகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு, ஜன் தன் யோஜனா, பிரதமர் ஆவாஸ் யோஜனா போன்றவை மேட்டுக்குடியினருக்கானதா? ஆயுஷ்மான் பாரத் மேட்டுக்குடிப் பிரிவினருக்கானதா? என்றார்.

ப.சிதம்பரம் பெயரைக் குறிப்பிடாமல் 2012-ல் விலை உயர்வு குறித்து பேசியதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன்:

“2012-ம் ஆண்டு விலை உயர்வு விவகாரம் எழுந்த போது முன்னாள் நிதியமைச்சர்களில் ஒருவர் என்ன கூறினார் தெரியுமா? நான் அவர் கூறியதை மேற்கோள் காட்டுகிறேன், ‘நகர்ப்புற நடுத்தர மக்கள் மினரல் வாட்டரை ரூ.15ற்கும், ஐஸ்கிரீமை ரூ.20க்கும் வாங்க முடியும் போது விலை உயர்வை எதிர்த்து இத்தனை சப்தம் ஏன்’ என்று கேட்டார்.

இவர்கள்தான் இப்போது என்னை மேட்டுக்குடி என்கின்றனர், இந்த அரசை மேட்டுக்குடியினருக்கானது என்கின்றனர்” என்று கடுமையாகச் சாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x