’வெங்காயத்திற்கு பதிலாக அவ்கேடா பழம் சாப்பிடுகிறாரா?’ -  நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி 

ப.சிதம்பரம்- கோப்புப் படம்
ப.சிதம்பரம்- கோப்புப் படம்
Updated on
1 min read

திஹார் சிறையில் இருந்து விடுதலையான ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தார். இதில் அவரை சிதம்பரம் வெங்காயத்திற்கு பதிலாக விலையுர்ந்த பழமான அவ்கேடா சாப்பிடுகிறாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதிலும் வெங்காயத்தின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பியான சுப்ரியா சுலே நேற்று மக்களவையில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் வெங்காயத்தை அதிக அளவில் உண்பதில்லை எனக் குறிப்பிட்டார். கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் இந்த பதிலை குறிப்பிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் ப.சிதம்பரம் இன்று கேள்வி எழுப்பினார்.

இதை குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கூறும்போது, ‘நேற்று நிதி அமைச்சர் நிர்மலா தான் வெங்காயம் உண்பதில்லை எனக் கூறி இருந்தார். அவர் வெங்காயம் உண்பதில்லை எனில் அவர் எதை சாப்பிடுகிறார். அதற்கு பதிலாக அவ்கேடா சாப்பிடுகிறாரா?’ எனக் கேட்டார்.

ஆனைக்கொய்யா அல்லது வெண்ணை பழம் எனும் அவ்கேடா ஒருவகை பழம் ஆகும், மிகவும் விலை உயர்ந்த பழமான இந்த அவ்கேடா பரவலாகக் கிடைப்பதில்லை.

இதனால், அவ்கேடாவை உதாரணமாக்கி, நிதியமைச்சர் நிர்மலாவை கடுமையான விமர்சனம் செய்துள்ளார் சிதம்பரம். இவர் இன்று வெங்காய விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

அதில் பேசிய சிதம்பரம், ‘நாட்டின் பொருளாதாரம் தவறானவர்கள் கைகளில் சென்றுள்ளது’ எனவும் தெரிவித்தார்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in