

ஹைதராபாத் கால்நடை மருத்துவ ரான பிரியங்கா ரெட்டி (29) கடந்த புதன்கிழமை இரவு தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண் டிருந்தார். 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அவரை உயிரோடு எரித்து கொன்றது.
இது தொடர்பாக 4 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர்கள் ஹைதராபாத் செஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் மைனர்கள் என கூறப் படுகிறது. 14 நாட்கள் சிறைக்காவ லில் உள்ள இவர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஷாத் நகர் போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, குற்றவாளிகள் 4 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேரை, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று மாலை அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து 4 பேரையும் சிறைச்சாலையில் இருந்து மகபூப் நகர் போலீஸ் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
மேலும், இவ்வழக்கை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வழி செய்திட வேண்டுமென தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். இதற்கிணங்க மகபூப் நகரில் முதலாவது மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்து, இவ்வழக்கை விரைந்து முடிக்கவும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இனி, இதற்கென தனி நீதிமன்றம் அமைக்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, விரைவு நீதிமன்றத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியர்கள், லாரி உரிமையாளர், பிரியங்கா ரெட்டியின் சகோதரி, பெற்றோர் மற்றும் குற்றவாளிகளிடம் வெகு விரைவாக விசாரணை நடைபெற உள்ளது.
அதன்படி வெறும் 20 நாட்களி லேயே இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் என தெரிய வருகிறது. குற்றவாளிகள் 4 பேரின் சார்பில் யாரும் ஆஜராக கூடாது என மகபூப் நகர் மாவட்ட வழக் கறிஞர்கள் சங்கத்தினரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். இதனால், குற்றவாளிகள் சார்பில் தனியார் வழங்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்ப தால் இவ்வழக்கு மேலும் விரை வாக முடிக்கப்பட உள்ளது.