

டெல்லியில் உள்ள ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யில் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசும்போது, “ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டர் தண்ணீரை சேமிக்க மாணவர்கள் உறுதி யேற்க வேண்டும். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களையும் அவ்வாறு சேமிக்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலா ளர் ஆர்.சுப்ரமணியன் பேசும் போது, “புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் பொது மக்களின் பார்வைக்கு வெளி யிடப்படும்” என்றார்.
- பிடிஐ