

கர்நாடகாவை சேர்ந்தவர் ஜனார்தன சர்மா. தனது 2 மகள் களை குஜராத்தின் ஹீராபூரில் உள்ள ஆசிரமத்தில் நித்யானந்தா அடைத்து வைத்துள்ளதாக அந்த மாநில உயர் நீதி மன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து குஜராத் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜனார்தன சர்மா வின் 2 மகள்கள் மற்றும் ஆதர வாளர்களுடன் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தொடர் புகார் களின் அடிப்படையில் ஹீராபூரில் உள்ள ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் ஆசிரம வளா கத்தில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த ஆசிரமத்துக்குள் செயல் படும் சிபிஎஸ்இ பள்ளியின் அங்கீ காரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.