ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் 

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் 
Updated on
1 min read

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (26). ஹைதராபாத் மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பணிக்குச் சென்ற பிரியங்கா, இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வழியில் அவரது இருசக்கர வாகனத்தின் டயர் ‘பஞ்சர்' ஆகியுள்ளது. இந்நிலையில் பிரியங்காவுக்கு உதவுவதாகக் கூறி நான்கு நபர்கள் அவரைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

குற்றத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கோலி:

ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் முற்றிலும் அவமானகரமானது. சமூகமாகப் பொறுப்பேற்று இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

தவாண்:

இது நிச்சயம் வருத்தம் தரக் கூடிய செய்தி. இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அவரின் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அமித் மிஸ்ரா

நான் நடந்ததை நினைத்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

லஷ்மண்

மனிதமற்று நடந்து கொண்டவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். இந்திய அரசிடமிருந்து விரைவான நடவடிக்கை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in