

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
வெளியுறவு அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுஷ்மா ஸ்வராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இந்திய- அமெரிக்க உறவுகளை ஊக்குவிப்பது குறித்து ஆலோசித்தார்.
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்ரி, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பேச்சின் போது, வர்த்தக ரீதியில் 500 பில்லியன் டாலர் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகள் உடனான உடன்பாடுகள் குறித்து சுஷ்மா ஸ்வராஜ், ஜான் கெர்ரியிடம் ஆலோசித்தார்.
முன்னதாக், புதிய பிரதமாரக் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு ஒபாமா தலைமையிலான அரசு அழைப்பு விடுப்பதாக, ஜான் கெர்ரி கூறியிருந்தார்.