காஷ்மீரில் நாளை முதல் 3 நாள் சுற்றுப் பயணம்: தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிகளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி

காஷ்மீரில் நாளை முதல் 3 நாள் சுற்றுப் பயணம்: தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிகளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை முதல் மூன்று நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின்போது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 3 பகுதிகளுக்கும் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார்.

முதலில் ஜம்மு பகுதிக்குச் செல்லும் ராகுல், பூஞ்ச் மாவட்டத் தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாலகோட் பகுதியைப் பார்வையிடுகிறார். இங்குதான் கடந்த 15-ம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாயினர்.

பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசும் ராகுல், எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் உரையாட திட்டமிட்டுள்ளார். இதுதவிர பஞ்சாயத்து தொடர்பான கருத்தரங்கில் பேசும் ராகுல், பல்வேறு சமுதாய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்.

அடுத்த நாள் காஷ்மீர் பகுதியில் சோபோர் மற்றும் பம்போர் பகுதி களில் சுற்றுப்பயணம் மேற்கொள் கிறார். பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் சொந்த ஊர்தான் சோபோர். அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடும் அவர், பின்னர் லடாக் மாவட்டத்தின் கார்கில் மற்றும் லே பகுதிகளை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவில் பூசல் நிலவி வரும் நிலையில், இதுகுறித்து மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in