

நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அறைகளை கட்சிகளுக்கு ஒதுக்கு வதில் குழப்பம் நிலவுவதாகக் கூறப் படுகிறது. இதனால், தென்னிந்திய கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் மொத்தம் 50 எம்.பி.க்கள் வைத்திருந்த அதிமுகவுக்கு தரைத்தளத்தில் உள்ள மூன்று அறைகள் கொண்ட எண் 46 ஒதுக்கப்பட்டிருந்தது. அடுத்து வந்த மக்களவை தேர்த லில் அதிமுக எம்.பி.க்களின் எண் ணிக்கை ஒன்றாகக் குறைந்தது. மேலும் மாநிலங்களவையிலும் அதன் எண்ணிக்கை 11 என குறைந் தது. அதேநேரத்தில், திமுகவுக்கு தற்போது மக்களவையில் 24, மாநி லங்களவையில் 5 என மொத்தம் 29 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் அதிமுக அலுவலகம் இருக்கும் அறை தற்போது திமுகவுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அதிமுகவுக்கு சிறிய அறையான 45-பி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 45-பி அறையில் ஐக்கிய ஜனதா தள அலுவலகம் (ஜேடியூ) உள்ளது. இதற்கு மேல்தளத்தில் ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த வேறு ஒரு கட்சி இன்னும் காலி செய்யவில்லை. ஜேடியூ காலி செய்யாததால் அந்த அறைக்கு அதிமுகவால் மாற முடியவில்லை. இதே காரணத்திற்காக திமுகவும் அதற்கு புதிதாக ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் அமர முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், அதிமுகவுக்கு வேறு ஒரு அறை எண் 111-பி ஒதுக்கப்படுவதாகக் கூறி மற்றொரு உத்தரவு அனுப்பப்பட்டது. இது, மூன்றாவது தளம் என்பதால் அதிமுக எம்.பி.க்கள் சபாநாயகரை சந்தித்து சூழலை விளக்கினர். இதனிடையே, 111-பி அறையில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் அதை இன்னும் காலி செய்யாமல் உள்ளது. இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட அறையை அதில் இருக்கும் தெலுங்குதேசம் கட்சி காலி செய்யாமல் இருப்பது காரணமாக உள்ளது. இந்த சூழலால் தென் னிந்திய மாநிலங்களை சேர்ந்த கட்சிகள் இடையே மனக்கசப்பும், மோதல் சூழலும் உருவாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் நாடாளுமன்ற அதிமுக எம்.பிக்கள் வட்டாரங்கள் கூறும்போது, ‘தென் மாநிலங்களில் எதிரும், புதிருமான கட்சிகளுக்கு இடையே அறைகளை மாற்றி ஒதுக்கியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சபாநாய கரிடம் முறையிட்டும் இதுவரை பலனில்லை. ஆளும் கட்சி கூட்டணி யாக இருந்தும் எங்களுக்கு பலன் கிடைக்காமல் தவிக்கவிடப் பட்டுள்ளோம்.’ என்றன.