

உத்தரபிரதேச அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் பாலும் கொடுக்கப்படுகிறது. சோன்பத்ரா மாவட்டத்தில் சோப் பான் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது.
இந்தப் பள்ளியில் 171 மாணவர் கள் படித்து வருகின்றனர். கடந்த புதன்கிழமை மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பெண்மணி வெந்நீர் நிரம்பிய வாளி ஒன்றில் ஒரு லிட்டர் பாலை கலந்து 81 மாண வர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வாளி தண்ணீரில் பாலைக் கலந்து கொடுத்ததை அந்தப் பெண்மணி ஒப்புக் கொள்ளும் மற்றொரு வீடியோவும் வெளியானது.
கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தப் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய சோன் பத்ரா மாவட்ட ஆட்சியர் ராஜ லிங்கன், ஆசிரியர் ஒருவரை சஸ்பெண்ட் செய்தார்.மேலும் கிராம பஞ்சாயத்து ஒப்பந்த ஆசிரி யர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவருக்கு எதி ராக முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள தாகவும் இதற்கு காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.