

பெங்களூருவில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 100 இடங்களில் பெண் வேட் பாளர்கள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். எனவே பாஜக பெண் ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்ய வேண்டும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல் முறையாக பெங்களூரு மாநகராட்சியில் பெண் களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி 198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சியில் 98 வார்டுகளில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய முக்கிய கட்சிகள் பெண் வேட்பாளர் களை நிறுத்தின. இதுமட்டுமில்லா மல் சில வார்டுகளில் பெண்கள் சுயேச்சையாகவும் களமிறங்கினர்.
இந்த தேர்தலில் ஆண் வேட் பாளர்களை காட்டிலும் பெண் வேட்பாளர்கள் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது பெங்களூரு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 100 வார்டுகளில் பெண்களே வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் பாஜகவில் 60 பேரும், காங்கிரஸில் 30 பேரும், மஜத-வில் 8 பேரும், சுயேச்சையாக களமிறங் கிய 2 பெண்களும் அடங்குவர்.
கடந்த 2010-ம் ஆண்டு நடை பெற்ற மாநகராட்சித் தேர்தலில் 68 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். இதனால் பெங்களூரு வின் முதல் பெண் மேயராக சாந்த குமாரியை பாஜக நியமித்தது. கடந்த முறையை காட்டிலும் தற்போது அதிக பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் வெளிநாட்டில் பணி யாற்றிய பெண் ஒருவரும், காவல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பெண் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இது தவிர மனித உரிமை ஆர்வலர்களாக இருப்பவர்களும், சமூக சேவகர்களாக இருப்பவர்களும் கவுன்சிலர் ஆகியுள்ளனர்.
“பெரும்பான்மை வார்டுகளில் வென்றுள்ள பெண்கள் சார்பாக, மீண்டும் பெண் ஒருவரை மேயராக பாஜக நியமிக்க வேண்டும். இதே போல வெற்றி பெற்றுள்ள பெண் தங்களின் கணவர், சகோதரர், தந்தை ஆகியோரை நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்க கூடாது. ” என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.