Published : 01 Dec 2019 07:30 AM
Last Updated : 01 Dec 2019 07:30 AM

ம.பி.யில் காதல் வலையில் சிக்கவைத்து கொலைக் குற்றவாளியை கைது செய்த பெண் போலீஸ்

போபால்

மத்திய பிரதேசத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், கொலைக் குற்றவாளியை காதல் வலையில் சிக்கவைத்து, திருமணம் செய்வது போல நடித்து, அவரை கைது செய்துள்ளார்.

மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச எல்லையில், பால்கிஷண் சவுபே என்பவர் வழிப்பறி மற்றும் கொலை உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த வழிப்பறி மற்றும் கொலை தொடர்பாக, சத்தார்பூர் போலீஸார் சவுபே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல முறை நெருங்கியபோதும் சவுபேவை போலீஸாரால் கைது செய்ய முடிய வில்லை. அவரைப் பிடித்துத் தருவோ ருக்கு ரூ.10 ஆயிரம் பரிசும் அறிவிக் கப்பட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் நவ்கான் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக மாதவி அக்னி ஹோத்ரி (28) சமீபத்தில் நியமிக்கப்பட் டார். சவுபேவை கைது செய்ய முடிவு செய்த மாதவி, அவருடைய விவரங் களை சேகரித்தார். சவுபேவுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இருந்ததையும் முகநூலில் உலவி வந்ததையும் கண்டுபிடித்தார். முகநூலில் இருந்த அவரது புகைப்படத்தையும் பதிவிறக்கம் செய்து கொண்டார்.

இதுகுறித்து மாதவி கூறும்போது, “முகநூலில் ராதா லோதி என்ற பெயரில் சவுபேவுடன் பழக ஆரம்பித்தேன். நான் சத்தார்பூரைச் சேர்ந்தவள் என்றும் டெல்லியில் கூலி வேலை செய்வதாக வும் தெரிவித்தேன். 3 நாட்களே பழகிய நிலையில் என்னை திருமணம் செய்துகொள்ள சவுபே விருப்பம் தெரிவித்தார். அதற்கு முன்பு என்னை சந்திக்க விரும்பினார். இதற்கு ஒப்புக் கொண்ட நான், ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் சந்திக்க ஒப்புக் கொண்டேன். அங்கு நான் துப்பாக்கியு டன் சென்றேன். என்னுடன் சில போலீ ஸாரை சாதாரண உடையில் உறவினர் போல அழைத்துச் சென்றேன். மேலும் சாதாரண உடையணிந்த பல போலீ ஸார் துப்பாக்கியுடன் கோயில் பகுதி யில் இருந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த சவுபே, என்னை நோக்கி வந்தார். அப்போது போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x